வணங்குகின்றேன். .


எழுதிமுடித்தவன் அரைக்கவிஞன் - நல்ல

விமர்சகன் கிடைத்தால் முழுக்கவிஞன் !

Wednesday, February 22, 2012

நானும் என்கவிதைகளும்

வணக்கம். நையாண்டிமேளம் என்பது 2000 ல் வெளியாகி தமிழறிஞர்களாலும் கவிதை சுவைஞர்களாலும் பாராட்டப்பட்ட என் கவிதை நூல்; இதுவே இந்த வலைப்பூவிற்கும் தலைப்பாகிவிட்டது!
விளம்பர வெளிச்சத்திற்குள் இல்லாத கவிஞர்களின் நல்ல கவித்துவ வரிகள் பல மேடைகளில் கையாளப்பட்டாலும் அதன் படைப்பாளிக்கு அடையாளமோ அங்கீகாரமோ கிடைக்காமல் போவது துரதிஷ்டமே !
என் கவிதை நறுக்கு அந்தமான் காதலி திரைப்படத்தில் ஒரு வசனமாக இடம்பெற்றது; இப்போது சாலமன்பாப்பையா பட்டிமன்றத்தில் "விழுங்கிட்டான்" என்ற என்கவிதை கையாளப்பட்டது.
தன்னுடைய நல்ல கவிதைகளை வாசகர்களிடம் சேர்ப்பதற்கு இப்போது கூடுதல்
வசதி கிடைத்திருப்பது அதிருஷ்டமே .
முதலில் வல்லிக்கண்ணன், தாமரைசெந்தூர்பாண்டி, அவ்வைநடராசனார்,ஞானக்கூத்தன் முதலான பெருமக்களின் அணிந்துரைகளைக் குறிப்பிடுகின்றேன், நன்றி . .

2 comments:

  1. Dear Dr.Kandhan,
    In the era of tight scheduled doctors who always run after moneyed patients,ur mind has been diverted to poems--really great!After reading ur poems I had a BETTER SATISFACTION AND HAPPINESS than having treated 1000 cancer patients.With regards to PEY VEEDU--in every pey veedu one angel will be there either in the form of thaaram or maruthaaram!Best wishes!keep it up--Meher

    ReplyDelete
    Replies
    1. உங்கள் வருகைக்கும் சிறப்பான பின்னூட்டத்திற்கும் நன்றி. .
      பேய்வீட்டிலும் தேவதை தோன்றுவாள் என்ற நம்பிக்கையிலும் தேவதை யாராக இருக்கலாம் என்ற உங்கள்'விருப்ப'த்திலும் உங்களின் தனி முத்திரை பதிந்துவிட்ட்து; அதுதான் டாக்டர் மெகர்அலி! மருத்துவஞானமும் மொழிப்பயிற்சியும் நிரம்பப் பெற்ற நீங்கள் ஏன் பயனுள்ள மருத்துவ கட்டுரைகளை எழுதக்கூடாது? உங்களின் எழுத்துக்களை விருந்தினர் பக்கமாக்கி பதிவு செய்ய வரவேற்கிறேன் ; இது நண்பர் டாக்டர் இளங்கோவனுக்கும் பொருந்தும் ; வாருங்கள். .

      Delete

உங்களை வரவேற்கிறேன். .